‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!
‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!
சென்னை:
மர்மம், அமானுஷ்யம், குற்றப்பின்னணி என வித்தியாசமான களத்தில் உருவாகி வரும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ தற்போது வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இப்பாடல், படத்தின் மர்ம உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ ஒரு சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ராட்சசியே’ பாடல் படத்தின் அமானுஷ்ய பின்னணியை இ...
