வி.ஆர். தினேஷின் 26வது படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என வித்தியாசமான தலைப்பு!
வி.ஆர். தினேஷின் 26வது படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என வித்தியாசமான தலைப்பு!
பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் லுக்
தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் வி.ஆர். தினேஷ், தனது 26வது திரைப்படத்தில் முழு நீள நகைச்சுவைக் கதையில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வி.ஆர். தினேஷுடன் கயல் ஆனந்தி, லிங்கேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கதையின் மையத்தை நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நகர்த்தும் வகையில் உருவாகி வரும் ‘பந்தா கேங்ஸ்’, முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன....
