வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்
இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல மாசமான பேய், மோசமான பேய், மட்டமான பேய் என பலவிதமான பேய்களை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். இந்த படத்துல வர்ற ராசாத்தி பேய் எந்த வகையான பேய் என்று யோசிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. திடீர்னு பாசத்த காட்டுது, திடீர்னு கொலைவெறியோட தாக்குது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா...!
அரக்கோணத்திலிருந்து சென்னை ஐப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலை செய்ய வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் பேய் இருப்பது தெரியாமல் உள்ளே நுழைந்துவிட அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார்கள்.
தன் காதலனுடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ராவியாவை கொடூரமாக எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் தனக்கு நடக்காத திருமண...
