‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!
‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
1980-களின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி ‘பத்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரெய்லரின் தொடக்கமே பத்தாவின் பெயரைச் சுற்றியுள்ள பரபரப்பை உருவாக்குகிறது. அவரது வீரத்தைப் பற்றி சிறுவர்கள் பேசும் காட்சிகளும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறும் விஷயங்களும், பத்தா யார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால், டிரெய்லர் நகர நகர பத்தாவின் இன்னொரு பக்கம் வெளிப்படுகிறது. அதிரடியான ரௌடியாக அற...
