விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்
விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்
சென்னை, ஆகஸ்ட் 20:
காதல் கதைக்கு காமெடி கலந்தால் எப்படி இருக்கும்? அதிலும் அந்தக் கதையின் பின்னணி ஃபிட்னஸ் உலகமாக இருந்தால், இன்னும் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்! இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் ‘லைட்வெயிட், பேபி!’
ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் துறையில் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இருவரும் இப்படத்தில் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
பொதுவாக காதல் திரைப்படங்களில் பார்க்கப்படும் வழக்கமான பின்னணியிலிருந்து விலகி, ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் உலகத்தை கதையின் முக...
