விக்ரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.75/5)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும்,...