Tuesday, November 5
Shadow

60 வயது கிழவியாக நடிக்கும் தமன்னா

தமன்னா என்றாலே கவர்ச்சி அது மட்டும் இல்லாமல் இளமை தழும்பும் நடிப்பும் துள்ளலும் தான் ஆனால் தமன்னாவுக்கு வந்த திடீர் அவசரம் ஏன் .

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மதுரை மைக்கேல் கேரக்டரின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 60வயது அஸ்வின் தாதா கேரக்டரில் சிம்பு நடித்து வருகிறார். 60 வயது சிம்புவுக்கு ஜோடி என்றால் தமன்னாவுக்கும் கிட்டத்தட்ட 60 வயது முதிய பெண்ணின் கேரக்டரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசர் சமீபத்தில் வெளியான மாதிரி விரைவில் அஸ்வின் தாதா கேரக்டரின் டீசர் வெளிவரவுள்ளதாகவும், அப்போது இந்த கேள்விக்கான பதில் டீசரில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply