முதலில் சினிமாவில் நடித்தால் போதும் என்று சிலர் முயற்சிப்பர் அப்படி முயற்சித்து காமெடியன்யாக வளம் வருவார்கள் அதில் வெற்றி பெற்றவுடன் ஒன்லி ஹீரோ என்பார்கள் அப்படி பலர் முயற்சி வீண் போனது ஆனால் அதில் வெற்றி பெற்றவர் என்றால் அது சந்தானம் என்று தான் சொல்லணும்
ஹீரோக்களுடன் படம் முழுக்க வந்து சரவெடி காமெடிகளை கொளுத்தி போட்டு வந்தவர் சந்தானம். அப்படி நடித்து வந்த நேரம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேது, பவர்ஸ்டாருடன் இணைந்து மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
கே.எஸ்.மணிகண்டன் இயக்கிய அந்த படம் கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. விசாகா சிங் நாயகியாக நடித்த அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில், சந்தானத்துக்கு ஷோலோ ஹீரோவாக நடிக்கும் ஆர்வத்தை இந்த லட்டு படம்தான் ஏற்படுத்தியது.
அதன்பிறகுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர், தில்லுக்குத்துட்டு படத்தின் வெற்றிக்குப்பிறகு கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார். அதையடுத்து சர்வர் சுந்தரம் படத்தில் நடித் துள்ள சந்தானம், மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், அடுத்த படியாக கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க பல இளவட்ட நடிகைகள் தயாராக இருந்தபோதும், கதைப்படி ஓரளவு மாடர்னான நடிகைதான் வேண்டும் என்று சொல்லி இப்போது தமன்னா போன்ற கிளாமர் காட்டக்கூடிய நடிகைகளுக்கு வலைவீசி வருகின்றனர்.