
கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!
கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி அவர்களின் குடும்பத் திருமண விழா சிறப்பும், விமரிசையும் மிக்க சூழலில் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றதால், இந்த திருமண விழா கவனம் ஈர்த்த நிகழ்வாக அமைந்தது.
திருமண நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதேபோல், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M. தமிழ் குமரன் மணமக்களை வாழ்த்தி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் மகன் நந்தன் மணிரத்னம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மணமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
திருமண மண்டபம் பாரம்பரிய அலங்காரங்களுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், விருந்தினர்களுக்காக சிறப்பு விருந்தோம்பலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகள், திரையுலக பிரபலங்களின் வருகை, மகிழ்ச்சியான சந்திப்புகள் என விழா முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது.
திரையுலகம் மற்றும் தொழில்துறை பிரபலங்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடிய இந்த குடும்பத் திருமண விழா, நட்பு, உறவு மற்றும் அன்பை வெளிப்படுத்திய இனிய நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் மணமக்களின் எதிர்கால வாழ்க்கை வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Tamil Film Personalities Attend Lyca Vice Chairman Prem Sivasamy’s Family Wedding Celebration in Colombo
Colombo, Sri Lanka: The family wedding of Prem Sivasamy, Vice Chairman of Lyca, was celebrated in grand style in Colombo, bringing together prominent personalities from the Tamil film industry, business community, and close family members.
The elegant wedding ceremony witnessed the presence of several distinguished guests, making it a memorable occasion. Lyca Group Chairman Subaskaran attended the celebrations and conveyed his heartfelt wishes to the newlyweds. Also present was G.K.M. Tamil Kumaran, CEO of Lyca Productions and President of the Tamil Film Active Producers Association, who extended his warm congratulations to the couple.
The event was also attended by filmmaker Jason Sanjay, Nandan Mani Ratnam, son of acclaimed filmmaker Mani Ratnam, and celebrated music composer Santhosh Narayanan, who was accompanied by his family. The guests interacted with the newlyweds, shared their best wishes, and joined in the joyous celebrations.
The wedding was attended by relatives, friends, leading figures from the film fraternity, and members of the business community, creating a vibrant and festive atmosphere. Beautifully arranged décor, warm hospitality, and the gathering of several notable personalities added to the grandeur of the occasion.
The celebration stood as a memorable family event, reflecting togetherness, friendship, and goodwill, while the distinguished guests wished the newly married couple a lifetime of happiness, prosperity, and success.
