Friday, December 6
Shadow

தல 57 அஜித்துடன் ஜோடி சேரும் மூன்றாவது பிரபல நாயகி

தல 57 முதல் கட்ட படபிடிப்பை ஐரோப்பாவில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த படக்குழுவினர் இப்ப சென்னை படபிடிப்ப ஆரம்பிக்க உள்ளனர் இதை டுத்து அமெரிக்கா செல்லும் படக்குழுவினர் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி ஆம் தலைக்கு இந்த படத்தின் மூன்று நாயகியாம் ஏற்கனவே இருவரை நமக்கு தெரியும்.

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். மேலும் இரண்டாவது ஹீரோயினாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் இருப்பார் எனவும் அவர் யார் என்பது சஸ்பென்ஸ் எனவும் இப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த மூன்றாவது ஹீரோயின் வேறு யாருமில்லை அனுஷ்கா தான் என தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இவருக்கு வெயிட்டான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Leave a Reply