வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அதன்பின் படக்குழுவினர் மீண்டும் தாயகம் திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது இதுவரை ஒரேஒரு புகைப்படம் தான் கசிந்துள்ளது. இப் படத்தின் முதல் பார்வையும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.