வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.
‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது.
இதைதொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.