Saturday, December 14
Shadow

ஒரேநாளில் இரட்டை விருந்து – தல ரசிகர்கள் தயாரா?

அஜித்தின் தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை இதற்கிடையில் படம் வெளியாகுவதில் வேறு தாமதம் என்றும் சொல்லபடுகிறது இதனால் சோர்ந்து போன அஜித் ரசிகர்களுக்கு இரட்டை இனிப்பு செய்தி.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் குடியரசு தினத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் அதேநாளில் இப்படத்தின் தீம் இசையும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply