Friday, October 11
Shadow

விஜய்சேதுபதி கைவசம் தமிழ் சினிமா 2016 மற்றும் 2017 இவர் தான் 1

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தன் திறமையை தமிழ் சினிமாவில் காண்பித்து படி படியாக இன்று நம்பர் 1 மட்டும் இல்லாமல் சிறந்த நடிகர் என்றும் நிரூபித்தவர் விஜய் சேதுபதி தனக்கென தனி பாணி சிறந்த கதை தேர்வு இப்படி தமிழ் சினிமாவில் மிக பெரிய இடம் சம்பளம் என்று அமைத்து கொண்டவர். தான் விஜய் சேது பதி .

2016ம் ஆண்டில் விஜய்சேதுபதி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். எப்படி என்றால் அவர்தான் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த ஹீரோ. கடந்த 2015ம் ஆண்டில் புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் என 3 படங்களில் மட்டுமே நடித்திருந்த விஜய் சேதுபதி, இந்த ஆண்டு சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என இதுவரை 6 படங்களில் நடித்துள்ளார்.

இந்த மாதம் வெளியாக இருக்கும் புரியாத புதிர் (மெல்லிசை) படத்தையும் சேர்த்தால் 7 படமாகிறது. மற்ற ஹீரோக்கள் அதிகபட்சம் 2 அல்லது 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். அதுவும் முன்னணி ஹீரோக்கள் தலா ஒரு படம்தான்.

அடுத்த ஆண்டும் விஜய்சேதுபதிதான் முதல் இடத்தில் இருப்பார் என்று தெரிகிறது. இடம்பொருள் ஏவல், வட சென்னை, கவண், விக்ரம் வேதா, சி.பிரேம்குமார் இயக்கும் படம், ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கும் படம் என 6 படங்கள் கைவசம் இருக்கிறது. நீங்க கலக்குங்க ப்ரோ…

Leave a Reply