
புதுமையான கதை அம்சத்துடன் ‘தி டார்ம்’ தொடக்கம் – முனீஸ்காந்த் முன்னணி கதாபாத்திரத்தில்!
சென்னை, மார்ச் 23
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள முனீஸ்காந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி டார்ம்’ திரைப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னை நகரில் பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஷாலினி, காசி தங்கம், சபரீஷ், சாம் ஜான், அருண் கார்த்திக், நிகில் நாயர், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை இளையராஜா மேற்கொள்ள, இசையமைப்பை சாம் விஷால் கவனிக்கிறார். படத்தொகுப்பை அனில் கிருஷ்ணன் மேற்கொள்கிறார்; கலை இயக்கத்தை விமல் ராஜ் கவனிக்கிறார்.
‘குட் ஸ்டஃப்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டில்லி தயாரிக்கும் இந்த படம், ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுமையான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது.
புதுமையான கதை அம்சத்துடன் தயாராகும் ‘தி டார்ம்’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘The Dorm’ Launched with a Promising Concept – Munishkanth in the Lead Role
Chennai, March 23
The launch ceremony of The Dorm, starring popular Tamil comedian Munishkanth in a lead role, was held today in Chennai with traditional rituals and grandeur.
Directed by Deepa Sridhar, the film features an ensemble cast including Shalini, Kasi Thangam, Sabarish, Sam John, Arun Karthik, Nikhil Nair, Vasundhara Srinath, Sindhu, Feroz, and many others in pivotal roles.
On the technical front, cinematography is handled by Ilaiyaraja, while Sam Vishal composes the music. Editing is managed by Anil Krishnan, and art direction is overseen by Vimal Raj.
Produced by B. Dilli under the banner of Good Stuff, the film is being crafted to offer audiences a unique and memorable theatrical experience.
With an innovative storyline, The Dorm is already shaping up to be one of the most anticipated films of the year. The makers have also announced that the first look, motion poster, and further updates will be officially released soon.
