Saturday, April 20
Shadow

தி கிரேட் இண்டியன் கிச்சன் – திரைவிமர்சனம் Rank 1.5/5

கண்ணன் இயக்கத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் கலைராணி நந்தகோபால் மற்றும் பலர் நடிப்பில்

மலையாளத்தில் மிக பெரிய வெற்றியடைந்த இந்த படத்தில் தமிழியில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன்

நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு கலாச்சாரம் உண்டு அதன் அடிப்படையில் தான் சினிமாக்கள் உருவாகிறது. பொதுவாக ரீமேக் படங்கள் வரும் போது ஒவ்வொரு கலாச்சாரத்துக்கு ஏற்ப திரைக்கதை மாற்றி செய்வது அந்த இயக்குறின் திறமை என்பார்கள் நாம் எந்த மொழியில் இருந்து ரீமேக் செய்கிறோமோ அதை அப்படியே சிதைக்காமல் எடுப்பவர்கள் ஒரு சிலர் அதை தான் கண்ணன் இந்த படத்தில் செய்துள்ளார்.

சரி படத்தின் கதை பார்ப்போம் நகரத்தில் வசிக்கும் பாரம்பரிய குடும்பத்தில் கல்யாணம் ஆகிவரும் ஐஷ்வர்யா ராஜேஷ் திருமணம் ஆன அடுத்தநாள் முதல் அடுப்படியில் இருக்கும் வேலை மற்றும் கணவனின் படுக்கரை வேலை இது தான் அவளுக்கு சொந்தம் இது அவளுக்கு அலுப்பு தேடுகிறது அது மட்டும் இல்லாமல் அவளின் சந்தோசங்கள் அனைத்தும் அந்த அடுப்படியில் போகிறது கணவனுக்கு பணி புரியலாம் மாமனாருக்கு பல் துலக்க பிரஷ் முதல் கொண்டு வந்து கொடுப்பது என்பது எப்படி ஆனால் இந்த வீட்டில் செய்யவேண்டும் மாமனாருக்கு ஒரு சமையல்

கணவனுக்கு ஒரு சமையல் இப்படி அடுப்படியில் வெந்து கிடக்கும் பெண் வேடம் இதை இவள் எப்படி முறியடித்து தனக்கான வேலை செய்கிறாள் என்பது தான் கதை.

இயக்குனர் கண்ணன் மீது படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிவம் தான் வரும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை படத்தில் மிக மோசமாக கோவம் வரும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை

இயக்குனர் கண்ணன் படங்கள் என்றால் அதில் நகைச்சுவை கலந்த மெசேஜ் இருக்கும் படங்களாக நாம் பார்த்து இருக்கிறோம் ஆனால் இது நகைச்சுவையும் இல்லை இவர் சொல்ல வந்த மெசேஜ் பெண்களை மிகவும் வேதனை உண்டாகும் அதோடு இந்து மத கலாச்சாரத்தை இழிவு படுத்தி எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டில் இப்படி எல்லாம் இருக்குமா அதுவும் நகர வாழ்க்கையில் என்பது தான் கேள்விகுறி

மலையாளத்தில் இந்த கதை கிராமத்தில் நடக்கும் கதை அதே போல அய்யப்பன் கோவில் விவகாரம் தோல்வியடைந்து பக்தர்கள் நிலை தான் சரி என்று உயர்நீதி மன்றம் அந்த விவகாரத்தை விட்டு விட்டது அதை இவர் ஏன் கையில் எடுக்க வேண்டும் மலையாளத்தில் எப்படி இருக்கோ அப்படியே எடுக்க இவர் எதுக்கு அது மட்டும் இல்லை அவர்கள் இந்த படத்தை எந்த காலகட்டத்தில் எடுத்தது என்று நாம் யோசிக்கணும். அதை விட்டு பலரின் மனதை புன் படும் படி படம் எடுப்பது நியாம் இல்லை ஒரு மதத்தை இழிவு பண்ணி அதுவும் தமிழர்களின் கலாச்சாரத்தை இழிவு பண்ணி படம் எடுத்து இருப்பது வேதனை.