Saturday, March 22
Shadow

மனிதரில் புனிதர் ராகவா லாரன்ஸ் தொடரும் மனிதாபிமானம்

பணம் சம்பாதித்து தான் மட்டும் வாழுவது வாழ்கை இல்லை நம்மி சுற்றி ஏன் நம் சமுதாயம் எல்லோரும் அதில் பயன் பெறவேண்டும் என்று நினைப்பவன் தான் மனிதன் இல்லை புனிதன் அப்படி பட்டவர் தான் ராகவா லாரன்ஸ் தான் வறுமையில் இருந்ததை பணம் வந்தபின் நினைத்து பார்ப்பவன் மனிதன் அதை செய்பவர் இவர் தான் சம்பாதிக்கும் பெரும் பங்கை நல்ல விஷயத்துக்கு செலவு செய்பவர் தான் இந்த மனிதரில் புனிதர்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை இவருடைய முயற்சியில் 130 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது 131-வது குழந்தையாக பிரியங்கா என்ற குழந்தைக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

பிரியங்கா மற்றும் அவளது பெற்றோர்

இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரியங்கா பூரண நலத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, டாக்டர்களுக்கு ராகவா லாரன்ஸ் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுக்கு பிரியங்காவின் பெற்றோர்கள் மட்டுமில்லாது பலரும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply