
ஃபேஸ்புக்கின் மறைக்கப்பட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் ‘தி சோஷியல் ரெக்கனிங்’!
‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்திற்குப் பிறகு ஆரோன் சோர்கின் தரும் அதிரடி உண்மைச் சம்பவக் கதை
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா சார்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம் ‘தி சோஷியல் ரெக்கனிங்’ (The Social Reckoning). சமூக ஊடக உலகின் மறுபக்கத்தையும், அதன் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் பேசும் இப்படத்தை, புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற ‘தி சோஷியல் நெட்வொர்க்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங்’, அதே கதையைத் தொடரும் படமாக இல்லாமல், முற்றிலும் தனித்துவமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. சமூக ஊடக உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஃபேஸ்புக் தொடர்பான மிக முக்கியமான தகவல் கசிவு மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற விசாரணைகளை மையப்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி உண்மை!
2021-ஆம் ஆண்டு தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட பரபரப்பான புலனாய்வுத் தொடரான ‘தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்’ கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பொறியாளரான பிரான்சிஸ் ஹாகன் கதாபாத்திரத்தில் மைக்கி மேடிசன் நடித்துள்ளார். ஃபேஸ்புக்கின் உள்கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்திருக்கும் அவர், அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் என்பவரை அணுகுகிறார். இந்த கதாபாத்திரத்தில் ஜெரமி ஆலன் ஒயிட் நடித்துள்ளார்.
இருவரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த ஆபத்தான முயற்சி, சமூக ஊடக உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான 1,000-க்கும் மேற்பட்ட முக்கியமான ரகசிய ஆவணங்கள் வெளிவருகின்றன.
ஒரு நிறுவனத்தின் உள்ரகசியங்கள் எவ்வாறு பொதுவெளிக்கு வருகின்றன, அவற்றை வெளிக்கொண்டு வர முயற்சிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதையும் திரைப்படம் விரிவாகப் பதிவு செய்கிறது.
உண்மைச் சம்பவத்தை திரையில் பதிவு செய்யும் ஆரோன் சோர்கின்
சமூக ஊடகத்தின் எழுச்சி, அதன் பின்னணியில் இயங்கும் அதிகார மையங்கள் மற்றும் தொழில்நுட்ப உலகின் மறுபக்கத்தை ஆராயும் வகையில் உருவாகியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங்’, பரபரப்பான புலனாய்வு கதையுடன் விறுவிறுப்பான திரைக்கதையையும் இணைக்கிறது.
உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதைகளை உருவாக்குவதில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள ஆரோன் சோர்கின், இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் சமூக ஊடக உலகை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார்.
பிரம்மாண்ட நட்சத்திரக் கூட்டணி
‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படத்தில் மைக்கி மேடிசன், ஜெரமி ஆலன் ஒயிட், ஜெரமி ஸ்ட்ராங், பில் பர், பெட்டி கில்பின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜெஃப் க்ரோனன்வெத் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆலன் பாம்கார்டன் கவனிக்க, இசையை பிரபல இசையமைப்பாளர் அலெக்சாண்டர் டெஸ்பிளா அமைத்துள்ளார்.
உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி, லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.
சமூக ஊடக உலகின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் கேள்விகளையும், வெளிவராமல் இருந்த உண்மைகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தொழில்நுட்ப உலகம் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தி சோஷியல் ரெக்கனிங்’ – சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு.

The Social Reckoning: Aaron Sorkin Brings the Untold Facebook Files to the Big Screen
Sony Pictures Entertainment India presents a gripping drama inspired by the explosive Facebook revelations of 2021
Sony Pictures Entertainment India presents ‘The Social Reckoning’, a compelling film written, co-produced and directed by acclaimed filmmaker Aaron Sorkin. While the film follows in the footsteps of Sorkin’s celebrated 2010 film The Social Network, it is not a direct continuation of the earlier story. Instead, it stands as a standalone film inspired by the real-life revelations surrounding Facebook that came to light in 2021.
The film explores the shocking disclosures made by former Facebook employee Frances Haugen and the subsequent reporting by The Wall Street Journal, which brought several closely guarded secrets of the social media giant into the public domain.
A Story That Exposes the Secrets Behind Social Media
At the heart of The Social Reckoning is the explosive investigative series ‘The Facebook Files’, published by The Wall Street Journal in 2021.
The story follows Frances Haugen, a young Facebook engineer portrayed by Mikey Madison, who seeks the assistance of The Wall Street Journal reporter Jeff Horwitz, played by Jeremy Allen White.
What begins as a risky attempt to reveal information from within one of the world’s most powerful technology companies soon turns into a high-stakes journey. Together, Haugen and Horwitz work to bring crucial internal information into the public eye.
Their efforts eventually lead to the exposure of more than 1,000 highly significant and confidential Facebook documents, shedding light on the company’s internal practices and raising important questions about the influence and impact of social media on society.
The film transforms this real-world episode into a gripping cinematic narrative, exploring the challenges faced by those who attempt to expose powerful institutions and the consequences of bringing hidden information to light.
Aaron Sorkin Returns to the World of Social Media
Known for his sharp writing and compelling portrayals of real-world events, Aaron Sorkin returns to the world of social media with The Social Reckoning.
The film examines the enormous influence of social media while delving into the complex relationship between technology, corporate power, journalism and public accountability.
Rather than revisiting the origins of Facebook explored in The Social Network, the new film focuses on a later chapter in the company’s history and the revelations that triggered a global conversation about the responsibilities of technology platforms.
An Ensemble Cast and Acclaimed Technical Crew
The film features an impressive ensemble cast including Mikey Madison, Jeremy Allen White, Jeremy Strong, Bill Burr and Betty Gilpin, among others.
The cinematography is handled by Jeff Cronenweth, while Alan Baumgarten is responsible for the editing. Oscar-winning composer Alexandre Desplat has composed the film’s music.
The worldwide premiere of The Social Reckoning was held at Curzon Mayfair Cinema in London, marking the film’s first major public screening.
With a powerful real-life story at its core and Aaron Sorkin at the helm, ‘The Social Reckoning’ promises to offer a thought-provoking look at the hidden workings of social media and the events that brought Facebook’s internal secrets into the spotlight.
‘The Social Reckoning’ – A Sony Pictures Entertainment India release.
