கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’.
சம்பள பிரச்சனையால் நின்று போன டப்பிங் எப்ப ஆரம்பிக்கும் என்று ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது இதுவரை டப்பிங் பேசவும் வரவில்லை சிம்பு ஆனால் இயக்குனர் கெளதம் மேனன் வரும் மாதம் படம் ரிலீஸ் என்று சொல்ல்கிறார் .சிம்பு குணம் தெரிந்து தான் இந்த செய்தியை வெளியிட்டரா கெளதம் மேனன்
இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. எனவே இப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது இப்படம் செப்டம்பர் 30ஆம்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.