Tuesday, April 23
Shadow

தொண்டன் – திரைவிமர்சனம் (தொண்டன் நம் சகோதரன் ) Rank 4/5

சமுத்திரகனி என்றாலே சமுதாயத்தின் குரல் என்று நாம் அறிந்த விஷயம் தான் நடிக்கும் படங்களிலே நல்ல கருத்துகளை சொல்லும் ஒரு சிறந்த நடிகன் என்று நாம் அறிந்த விஷயம் சமுத்திரகனி இயக்கம் என்றாலே பல அரசியவாதிகளுக்கு பயம்வரும் இந்த படத்தில் எந்த பிரச்சனை எந்த துறை என்று அரசியல்வாதிகள் மட்டும் இல்லை பொது மக்களுக்கும் ஏதே சவுக்கடி காத்து இருக்கிறது என்று தெரியும். இவை அனைத்தையும் மிக சிறப்பாக சொல்லும் படம் தலைவனாக சொல்லாமல் தொண்டனாக அப்பாவியாக பண்பானவனாக அன்பாக சொல்லி இருக்கும் படம் தான் தொண்டன்.

ஒரு தனி மனிதன் ஒழுக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் மனிதாபிமானம் என்ன பெண்கள் மதிக்க தக்கவர்கள் ஒவ்வொரு துறையிலும் மனிதர்கள் இருப்பார்கள் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கும் படம் என்றும் சொல்லலாம்

இந்த படத்தில் எப்போதும் போல சமுத்திரகனியின் கமபனி நட்சத்திரம் எல்லோரும் இருகிறாங்க புதுசா சுனைனா விக்ராந்த் புதுமுகம் அர்த்தனா, சூரி தம்பி ராமையா கஞ்சாகருப்பு கணேச சம்பந்தம் வேலராமமூர்த்தி நமோ நாராயண , அணில் முரளி,தீபன் மூர்த்தி ,நாசத் நித்யா மற்றும் பலர் நடிப்பில் ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் மணிகண்டன் தயாரிப்பில் சமுத்திரகனி கதை திரைகதையமைத்து இயக்கி இருக்கும் படம் தொண்டன்

சரி படத்தின் கதையை பார்ப்போம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்த விட தனது ராணுவ பணியை உதறித் தள்ளிவிட்டு முதலில் ஊரைப் பார்ப்போம் என்று வந்து விடுகிறார். இதையடுத்து கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி.

அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக செயல்படும் ஒருவரை, தனது ஆட்களை ஏவி வெட்டி விடுகிறார். அவருக்கு முதலுதவி அளிக்கும் சமுத்திரக்கனி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். இதனால் சமுத்திரக்கனியை பழிவாங்க வேண்டும் என்று நமோ நாராயணா முயற்சி செய்து வருகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சமுத்திரக்கனியை காதலிக்கும் சுனைனா, தனது காதலை சமுத்திரக்கனியுடன் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது குடும்பத்துடன் சமுத்திரக்கனி பெண் கேட்க செல்கிறார். இதில் சுனைனாவின் தம்பி நசாத் தனது சாதுரியத்தால் அவனது அப்பாவின் சம்மதத்தை பெற வைக்கிறான். பின்னர் இருவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறத்தில் விக்ராந்த், சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார். ஆனால் அர்த்தனா விக்ராந்தின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.

ஒரு கட்டத்தில் தவறான வழிக்கு செல்லும் விக்ராந்துக்கு சில அறிவுரைகளை கூறி, முதலுதவி செய்யும் பணியில் ஈடுபடுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. இதில் ஒரு உயிரை காப்பற்றும் விக்ராந்துக்கு மகிழ்ச்சியுடன், மனநிறைவும் கிடைக்க அந்த பணியிலேயே நீடிக்க விரும்புகிறார்.

மேலும் அர்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணா தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் பொது இடத்தில் வைத்து அவனை அடித்து விடுகிறாள். இதையடுத்து அவளது கல்லூரிக்கு செல்லும் சவுந்தர் ராஜன் அர்த்தனாவின் தோழியை கட்டையால் அடிக்க, மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சவுந்தர்ராஜனை தாக்கி விடுகின்றனர். இந்நிலையில் சவுந்தர்ராஜனுக்கு முதலுதவி கொடுக்கும் சமுத்திரக்கனி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, சவுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

தனது தம்பியை, சமுத்திரக்கனி தான் கொன்றாதாக நினைத்து அவரை பழிவாங்க துடிக்கும் நமோ நாராயணா சமுத்திரக்கனி வீட்டில் குண்டு வைக்க, கர்ப்பமாக இருக்கும் சுனைனாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுகிறது. இந்நிலையில், நமோ நாராயணாவை சமுத்திரக்கனி பழிவாங்கினாரா? நமோ நாராயணாவுக்கு அறிவுரை கூறி திருத்தினாரா? விக்ராந்த் – அர்த்தனா காதல் வெற்றி பெற்றதா? என்பது படத்தின் மீதிக்கதை.

சமுத்திரகனி எல்லாவிதத்திலும் பாராட்டி பாராட்டி சலித்து விட்டது. காரணம் தான் செய்யும் ஒவ்வொரு செயலும் தன் சமுதாயம் நல்ல இருக்கணும் என்ற என்னோதொடு இருக்கும் மிக சிறந்த மனிதன் என்று தான் சொல்லணும். இந்த நல்ல எண்ணம் கொண்டவன் இயக்கி இருக்கும் படம் நிச்சயம் நல்ல தான் இருக்கும் என்பதை விட மனிதாபிமானம் என்ற சொல் ஆம்புலன்ஸ் அதை கருவாக எடுத்து அதன் மதிப்பை சொல்லும் இவரை எப்படி பாராட்டாமல் இருப்பது இந்த படத்தை பொறுத்தவரை சமுத்திகனி மிக சிறந்த நடிகன் என்று நிருபித்துள்ளார். அரசியல்வாதியிடம் பேசும் மூன்று நிமிடவசனம்எத்தனை கருத்துகள் விடாமல் பேசி இருப்பது அத்தனை மாடுகளின் பெயரை விடாமல் சொன்னது மெரீனா இளைஞர்கள் நடத்திய போராட்டம் அதில் பாதிக்க பட்ட மீனவர்களை பற்றியும் ஒரே ஷாட்யில் பேசி இருப்பது வாவ் என்று வியக்க வைக்கிறது

சமுத்திரகனிக்கு முதல் முறையாக தோல் கொடுத்து இருக்கும் விக்ராந்த் தானும் ஒரு மிக சிறந்த நடிகன் என்று நிருபித்துள்ளார். குடிகாரன் அம்புலன்ஸ் டிரைவர் இந்த இரண்டையும் மிக சிறப்பாக செய்துள்ளார். நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடம் அவருக்கு காத்து இருக்கிறது.

கஞ்சா கருப்பு சுனைனா புதுமுகம் அர்த்தனா வேலராமமூர்த்தி இப்படி படத்தில் நடித்து உள்ள அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் அதை விட தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். சூரி கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்கவைக்கிறார் கஞ்சா கருப்பு காமெடியை விட குணசித்திரத்தில் நம்மை நெகிழ வைக்கிறார் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நமோ நாராயணா ஒரு வில்லனுக்கு தேவையான கெத்துடன் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் தொண்டன் மிக சிறந்த படம் அனைவரும் பார்க்க வேண்டியபடம்
தொண்டன் நம் சகோதரன் Rank 4/5

Leave a Reply