பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அப்பணிகளைத் தொடர்ந்து இமானின் பின்னணி இசை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், இறுதிகட்ட பணிகள் தாமதத்தால் ‘செப்டம்பர் வெளியீடு’ என விளம்பரப்படுத்தி வந்தது படக்க்உழு.
தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
‘இருமுகன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு வசூலை அள்ளினார்கள். அவர்கள் பாணியில் வியாழக்கிழமை அன்று வெளியீட்டை திட்டமிட்டு இருக்கிறார்கள்.