Wednesday, April 1
Shadow

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த தின பதிவு

உலகம் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த மற்றும் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 10 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. –

இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பணியாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் முன்கூட்டியே சம்பளம் கொடுத்து உள்ளார். இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இது குறிச்சு பிரகாஷ்ராஜ், ‘நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டேன். இந்த கொரோனா வைரஸ் காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது அரை சம்பளத்தை தர தேவையான வழிமுறைகளை செய்து வருகிறேன். இறுதிக்கு வந்துட்டேன் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை நான் செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை செய்யுங்கள் என்று இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு நாம் திரும்ப தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய தருணம். அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கொரோனா வைரஸ் எனும் உயிர்க் கொள்ளியை எதிர்த்து போராடுவோம் என்று கூறியிருந்தார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

தான் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக, சில சமயங்களில் ஹீரோவையே மிஞ்சும் வகையில் நடிப்பில் அசத்துபவர். வில்லன்களிலும் ஹீரோயிஸம் செய்யும் நடிகரான பிரகாஷ்ராஜ், சில படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கட்டிப் போட்டுள்ளார். ஒரு கலைஞனுக்கு தான் வில்லனா, கதாநாயகனா என்பது முக்கியமல்ல, தான் ஏற்று நடித்துள்ள பாத்திரத்தை மக்கள் பேசும்படி செய்வதே அவனது முதல் பணி என்பார்கள். அதை கடைபிடிப்பவரான பர்த் டே பாய் பிரகாஷ் ராஜ்