Saturday, March 22
Shadow

மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக அறிமுகம் ஆகும் த்ரிஷா

13 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நாயகியாக வலம் வருபவர் திரிஷா. இப்போதும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை-2’, ‘கர்ஜனை’, ‘மோகினி’, ‘விஜய்சேதுபதியுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு என்று திரை உலகை கலக்கி வரும் திரிஷா, இந்திக்கும் போய் வந்தார். இப்போது மலையாள பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார்.இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இது. இதில் ‘பிரேமம்’ பட நாயகன் நிவின் பாலியின் ஜோடியாகிறார். இதை ஷியாமாபிரசாத் இயக்குகிறார். இது திரிஷாவின் 60-வது படம்.

இந்நிலையில் நிவின்பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் மலையாளப்படத்தில் நிவின்பாலியுடன் சேர்ந்து நடிக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Leave a Reply