நடிகை திரிஷா, நயன்தாரா என்ட்ரி ஆன போது சினிமாவிற்கு வந்தவர். திரையுலகில் போட்டி நடிகையாக இருந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.
அன்று திரிஷா கனவுக்கன்னியாக இருந்தார். இன்று நயன்தாரா நம்பர் 1 நடிகையாக இருக்கிறார்.
அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களோடு நடித்துவிட்டார். நிறைய ஹிட் படங்களை கொடுத்த இவர் பேய் கதைகளில் சமீபகாலமாக நடித்து கொண்டிருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை-2 படத்தில் நடித்தவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நாயகி படத்திலும் பேயாக நடித்திருந்தார்.
படம் பார்த்தவர்கள் த்ரிஷாவுக்கு இது தேவையா, வழக்கம் போல டூயட் பாடியிருந்தால் ஹிட்டாகி இருக்கும் என கமெண்ட் செய்தனர் .
தற்போது இதன் தொடர்ச்சியாக மோகினி என்று த்ரில் படத்தில் நடித்து வருகிறார். இதனுடைய போஸ்டர் நேற்று வெளியானது. வித்தியாசமாக 8 கைகளோடு பெண் தெய்வம் துர்கா தேவி போன்று திரிஷா இருந்தார்.
விஜய் மதுர படத்தை இயக்கிய ரமணா மாதேஷ் தான் இந்த படத்தையும் எடுக்கிறார். யோகிபாபு, சுவாமிநாதன் என நகைச்சுவை பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
அனிருத், ராதிகா சரத்குமார் மற்றும் சிலர் த்ரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை த்ரிஷாவின் இந்த படம் பூர்த்தி செய்யுமா?