‘மனிதன்’ படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்காலில் நடைபெற்று வந்தது.
சூரி, ரெஜினா, சிருஷ்ணி டாங்கே உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்க இருக்கிறார். எப்போதுமே குறுகிய காலத்தில் சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்கும் எழில், இப்படத்தையும் டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகளையும் முடிக்க இருக்கிறார்.
பெயரிடப்பாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி போன படத்தில் ரஜினியின் டைட்டில் இந்த படத்தில் ரஜினியின் வசனம் ‘சரவணன் இருக்க பயமேன்’ படையப்பா படத்தில் மிகவும் பேசப்பட்ட வசனதில் இதுவும் ஒன்று என்பது குறிப்டதக்கது