Wednesday, December 4
Shadow

காமெடியை விட்டு வில்லனாகிறார் வடிவேலு

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான். இவருடைய நடிப்பில் ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன. இப்படத்தை தொடர்ந்து தற்போது சரத்குமாருடன் இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், ராஜீவ் மேனன், சசி, பாண்டிராஜ், ராம்பாலா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க ஒப்ப்நதமாகியிருக்கிறார். இதில், ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தற்போது வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் வடிவேலு காமெடி கலந்த வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply