
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம். ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரப் பெயர் சிவாஜி.
அதுதான் படத்திற்கான தலைப்பாக “ வீரசிவாஜி “ யாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது. படம்இந்த மாதம் திரைக்கு வருகிறது.
படத்துக்கு இசை இமான் இசையில் பாடல்கள் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. அதே போல் படத்தின் ட்ரைலர் ஒரு எதிர் பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது .