
விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகும் பைரவாவின் இறுதி கட்ட வேலைகள் மிக மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது ரசிகர்களும் இதை வரவேற்க தயாராகி கொண்டி இருகிறார்கள். அதற்குள் ரசிகர்களுக்கு அடுத்த சந்தோசம் கொடுக்க தயாராகிறார் விஜய்
விஜய் அட்லியுடன் இரண்டாவது முறையாக இணைகிறார். இப்படத்தில் நாயகியாக சமந்தா, காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளனர், அதோடு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறதாம்.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுக பாடல் படமாக்க அட்லீ திட்டமிட்டுள்ளாராம். அதற்காக சென்னை மயிலாப்பூரில் ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. மொத்த பாடலும் அந்த செட்டிலேயே 5 நாட்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது,