Tuesday, April 22
Shadow

விஜய் 61 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம்

‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ’61’ வது படத்தில் நடித்து வருகிறார் இளைய தளபதி விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகளுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

61வது படமென்பதால் இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இப்படத்தை ‘விஜய் 61’ மற்றும் ‘தளபதி 61’ என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படம் இதனால் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளனர்

எப்போது அதிகாரப்பூர்வமான டைட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு முந்தைய நாள், மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது விஜய் தனது ரசிகர்களுக்குத் தரப்போகும் பிறந்தநாள் பரிசு என்றே சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடுவோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமென்பதால் மிக அதிக பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

அக்டோபர் மாதம் தீபாவளியன்று படம் ரிலீசாகும் என்று தெரிகிறது.

Leave a Reply