தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் சில தினங்களாக கூறப்பட்டு வந்தது. இத்தகவலை தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியின் மனைவியார் ஹேமா ருக்மணி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க கேட்டபோது விஜய்க்காக அதை ஓகே செய்துள்ளார் காஜல் அகர்வால். பைரவா படத்துக்கும் முதலில் நாயகியாக கஜல் தான் கேட்டது அனால் அவர் கால் ஷீட் இல்லை என்றதும் தான் கீர்த்தி சுரேஷ் முடிவு செய்தது நாம் அறிந்த விஷயம்