‘இளையதளபதி’ விஜய்க்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டது என்றால் அவருடன் மீண்டும் பணியாற்றவே அவர் விரும்புவார்.
அந்தவகையில் ரமணா, பேரரசு, தரணி, பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ‘அழகிய தமிழ் மகன்’ பரதனுடன் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
அதைபோல் அட்லி உடனும் எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.
ஆனால் விஜய்க்கும் அட்லீகும் பிரச்னை என்று பலர் வதந்திகிலபினர் அது மட்டும் இல்லாமல் அஜித் அடுத்த படத்தை இயக்கபோகிறார் என்றும் செய்திகள் வந்தன ஆனால் அட்லியை விஜய் விடமாட்டார். என்று நம்பத்தகுந்த வட்டராத்தில் செய்திகள் வந்துள்ளது.
தெறி படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.
இப்படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலையை அட்லி ஏற்கனவே தொடங்கிவிட்டார். முதலில் இப்படம் விஜய் 61ஆக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் விஜய்யின் 62ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.