
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என ஒரு பேவரட் கூட்டணி இருக்கும். இவர்கள் ஜோடி என்றால் சூப்பரா இருக்கும் என எண்ணுவார்கள். அப்படித்தான் கமல்-ஸ்ரீதேவி, ரஜினி-ஸ்ரீப்ரியா ஜோடி தான் பல படங்களில் ஒன்றாக நடித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் தற்போதுள்ள நடிகர்கள் எந்த ஹீரோயினுடன் அதிக படத்தில் நடித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
அஜித்
அஜித் இதுவரை சுமார் 56 படங்கள் வரை நடித்துவிட்டார். இதில் ஜோதிகாவுடன் தான் அஜித் 4 படங்களில் நடித்துள்ளார். வாலி, முகவரி, பூவெல்லாம் உன்வாசம், ராஜா.
விஜய்
விஜய்யுடன் 3 ஹீரோயின்கள் 4 படங்களில் நடித்துள்ளனர். இதில் சங்கவி ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா ஆகிய படங்களிலும், சிம்ரன் ஒன்ஸ்மோர், ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா ஆகிய படங்களிலும் த்ரிஷா கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி என நடித்துள்ளார்கள்.
சூர்யா
சூர்யாவின் ரியல் லைப் கூட்டணி தான் ரீல் லைப்பில் அதிக படத்தில் நடித்தது. ஆம் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் மட்டுமே பூவெல்லாம் உன்வாசம், உயிரிலே கலந்து, காக்க காக்க, பேரழகன், ஜில்லுன்னு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
விக்ரம்
விக்ரமுடன் ஜோதிகா தூள், அருள் எனவும் த்ரிஷா சாமி, பீமா ஆகிய படங்களிலும் எமி ஜாக்ஸன் ஐ, தாண்டவம், அனுஷ்கா தெய்வத்திருமகள், தாண்டவம் என 2 படங்களில் நடித்துள்ளார்கள்.
சிம்பு
சிம்புவுடன் ஜோதிகா மன்மதம், சரவணன், த்ரிஷா அலை, விண்ணைத்தாண்டி வருவாயா, நயன்தாரா வல்லவன், இது நம்ம ஆளு என அனைவரும் 2 படங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ்
தனுஷுடன் சோனியா அகர்வால் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, தமன்னா படிக்காதவன், வேங்கை என இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.
ஆர்யா
ஆர்யாவுடன் அதிக படங்களில் நடித்தது யோசிக்காமல் சொல்லிவிடலாம் பூஜா தான் என்று. உள்ளம் கேட்குமே, ஓரம்போ, நான் கடவுள், பட்டியல்(ஜோடி பரத்திற்கு) என 4 படங்களில் நடித்துள்ளார்கள்.
ஜீவா
ஜீவாவுடன் நயன்தாரா ஈ, திருநாள், பூனம் பாஜ்வா கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.