Saturday, April 26
Shadow

மீண்டும் மோதி கொள்ளும் விஜய் மற்றும் சூர்யா

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் ஒரு பாடல் மட்டுமே என்ற நிலையில் படபிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது .

மேலும் படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளியில் வெளியாகும் எனவும் ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது. இந்நிலையில் சூர்யா நடித்துவரும் S3 படத்தின் டீசரும் தீபாவளியில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் வெளியீடு என்றும் பேசபடுகிறது .

Leave a Reply