Wednesday, December 7
Shadow

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K பார்வைகளைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனியின் தத்துவ மேற்கோள்களின் குறிப்போடு பாடல் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து தெருக்களில் பிச்சைக்காரனாக மாறுவேடமிடும் பணக்கார கோடீஸ்வரன் பாத்திரத்தின், நோக்கம் என்ன? என்பதாக காட்டப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘பிகிலி எதிர்ப்பு நோக்கம்’. பிகிலி மற்றும் ஆண்டிபிகிலி என்றால் என்ன இது குறித்து பல விசாரணைகள் கிளம்பிய நிலையில், இந்தப் பாடல் பிகிலி என பெயரிடப்பட்ட எண்ணற்ற மனித மண்டை ஓடுகளைக் காட்டுகிறது, எனவே, பிகிலி எதிர்ப்பின் வீர சக்தி என்பதாகவும் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இந்த பாடல் உண்மையில் இந்தப்படம் எதைப்பற்றியது என்கிற ஆர்வத்தை தூண்சுடுவதாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றிப்படங்களை தந்து, ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் தனக்கென மறுக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, சமீபத்தில் திரையுலகில் தனது 6 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அவரது பிரம்மாண்டமான படைப்பான ‘பிச்சைக்காரன்’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு பதிப்பிலும் 144 நாட்களை கடந்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தின் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும், பரபரப்புகளும் அதிகரித்தன.

தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் இசையை கையாளும் விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குநராகவும் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். தேவ் கில், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், ராதா ரவி, மன்சூர் அலி கான், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

பிச்சைக்காரன் 2 படத்தை Vijay Antony Film Corporation சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

The recently unveiled track ‘Anti-Bikili Theme Song’ from Vijay Antony’s Pichaikkaran 2 has witnessed a prodigious reception. The track unveiled on March 16, 2022, has scaled 780K views in less than 24 hours. The song starts on a high note of philosophical quotes rendered by Vijay Antony, followed by his character, a rich billionaire disguising himself as a beggar on the streets. So, what’s the mission all about? In other words, ‘The Mission of Anti-Bikili’. While the inquisitive investigations have already popped up on what’s Bikili and Anti-Bikili, the song shows myriad human skulls labeled as Bikili, and hence, the heroic power of Anti-Bikili looks so promising. This leaves us excited to see what the real war is all about.

Actor Vijay Antony’s unceasing drive to entertain with content-and-entertainment-driven movies has earned him the undisputed safe bet of trade circles and a favorite of universal crowds. In particular, his magnum opus ‘Pichaikkaran’ that recently celebrated its 6th anniversary became a raging hit in not just Tamil, but a 144-day blockbuster in the Telugu version as well. With the official announcement on Pichaikkaran 2 made, the expectations and excitements got bigger.

The shooting of Pichaikkaran 2 is proceeding at a brisk pace. The film marks the directorial debut of Vijay Antony, who is handling editing and music as well. Kavya Thapper is playing the female lead opposite Vijay Antony. Dev Gill, Harish Peradi, John Vijay, Radha Ravi, Mansoor Ali Khan, YG Mahendran, Raja Krishnamoorthy, and a few others are part of this star-cast. Vijay Milton and Om Prakash are handling cinematography for this movie.

Fatima Vijay Antony is producing Pichaikkaran 2 for the banner of Vijay Antony Film Corporation.