Saturday, February 8
Shadow

படப்பிடிப்பில் கலாட்டா … விஜய்யை மாற்றிய கீர்த்தி சுரேஷ்

பொதுவாக விஜய் மிகவும் கலகலப்பானவர் இது அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் விஜய் எல்லோரிடமும் அப்படி கலகலவென இருக்கமாட்டார் அதுவும் பொது இடங்கள் என்று வந்தால் மிகவும் பொறுமை அமைதி மௌனம் காப்பவர் அதே மாதிரிதான் படபிடிப்பிலும் அப்படி பட்டவரை முற்றிலும் மாற்றிய பெருமை நம்ம கீர்த்தி சுரேஷ் உண்டு என்று சொல்லலாம் .

ஆனால் இப்போது அமைதியாக காணப்பட்ட விஜய் ஒரே அரட்டையாக அடிக்கிறாராம். அதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ்தானாம். விஜய்யும், கீர்த்தி சுரேஷும் இணைந்து ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார்கள் அல்லவா? இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தனக்கான காட்சி இல்லையென்றால் கேரவனுக்குள் செல்லும் விஜய், சில சமயங்களில் ஸ்பாட்டிலும் அமர்ந்திருப்பாராம்.

அப்போது அவர் அருகில் சென்று தானும் சேர் போட்டு விஜய்யுடன் பேச்சு கொடுப்பாராம் கீர்த்தி சுரேஷ். இப்படி ஆரம்பித்த இவர்களது பேச்சு இப்போது அரட்டையில் வந்து நிற்கிறதாம். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு காட்சி இல்லையென்றால் விஜய்யே கீர்த்தி சுரேஷ் பக்கம் சேரை போட்டு அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டாராம். இதை பைரவா படக்குழுவினர் பெருமையாக பேசுகின்றனர்.

Leave a Reply