‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதன் படக்குழுவினரை இறுதி செய்யும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
நாயகியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். காமெடியனாக வடிவேலு நடிக்கவுள்ளார். பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக விஷ்ணு அறிமுகமாகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ், ரிச்சர்ட் நாதன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் விஷ்ணு. படத்தின் எடிட்டராக ரூபன் பணிபுரிய உள்ளார்.
படக்குழுவினர் அனைவரையும் இறுதிசெய்தவுடன், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு