Tuesday, November 5
Shadow

அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் போஸ்டர் சாதனை

சில நாட்களுக்கு முன் தான் அஜித் ரசிகர்கள் மங்காத்தா ஐந்து வருடம் நிறைவுக்கு400 அடி போஸ்டர் அடித்து கொண்டாடினார்கள். இப்போது விஜய் ரசிகர்கள் விஜய் 6௦ படத்துக்கு போஸ்டர் சாதனை செய்துள்ளனர்.

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள், 450 அடியில் விஜய் நடித்த 59 படங்களின் புகைப்படங்களையும் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் 60ஆவது இடத்தில் ‘தளபதி 60’ படத்துக்காக வெயிட்டிங் என்றும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Leave a Reply