
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62′ படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஜோடியாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. யோகி பாபு மற்றும் பிரேம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது ரசிகர்ளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.