தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது. முதலில் சம்மதித்த ஜோதிகா, பின்னர் சில காரணங்களால் விலகிவிட்டார்.
ஆனாலும் அட்லி எப்படியாவது ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணினார் ஆனாலும் ஜோதிகா தன் முடிவை மாற்றமுடியாது என்று மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் இதனால் மனம் உடைந்த வேறு வழியின்றி விஜய்யிடம் சொல்ல விஜ என்ன சொன்னார் தெரியுமா
“அண்ணா நீங்க போய் பேசி பாருங்க.. நீங்க சொன்னா கேட்பாங்க”ன்னு விஜய்யை இதற்குள் இழுத்தாராம் அட்லி. ஆனால் நான் இந்த விஷயத்தில் தலையிட மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் விஜய்.