Saturday, October 12
Shadow

இதுவரை ஆறு படம் இன்னும் நான்கு படம் விஜய் சேதுபதி கையில்!

நடிகர் விஜய் சேதுபதி என்றால் பிஸியான நடிகர் என்று சொல்லலாம் ஆனால் இந்த அளவுக்கா, சப்பா முடியல, வாரம் வாரம் படம். எப்பா எப்புடி பா என தலை சுத்தி போக வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி

இந்த வருட தொடக்கத்தில் இருந்தே சேதுபதி கா க போ இறைவி தர்மதுரை ஆண்டவன் கட்டளை ‘றெக்க’ஆறாவது படம் என அடுக்கி கொண்டே போகிறார் எல்லாம் ஹிட் இன்னும் நான்கு படம் மெல்லினம் படம் முடிந்து வெளியாகும் நிலையில் உள்ளது

மேலும் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செலவம் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்திலும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ என்ற படத்திலும், ‘இதற்க்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், இந்த படங்களின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வரும் அக்டோபர் 7ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தருடன் ஒரு படத்திலும், தனுஷின் ‘வடசென்னை’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்

Leave a Reply