விஜய் சேதுபதி நடித்த “கடைசி விவசாயி” தழிழ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன் கடைசி விவசாயி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் இதில் கடைசி விவசாயியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொண்டிருக்கும் இயக்குநர் மணிகண்டன் அண்மையில் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மன நலம் குன்றிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.