Monday, April 21
Shadow

8 கெட்-அப்களில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி. என்ன படம் தெரியுமா

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம் அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த மனிதாபிமானவர் என்பது நாம் அறிந்த விஷயம் படத்துக்கு படம் வித்தியாசம் செயானும் என்ற ஆசை உள்ளவர் என்றால் அது விஜய் சேதுபதி ஆசை மட்டும் இல்லாமல் அதை செய்து வெற்றி காண்பவரும் அவர் என்றும் சொல்லலாம் தற்போது அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் பட்டியல் கொஞ்சம் நீளம் இவர் புதிதாக நடிக்கபோகும் படத்தில் மிக வித்தியாசமாக இருக்குமாம் .

ஆறுமுகக்குமார் இயக்கும் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் 8 கெட்-அப்களில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.

இந்தப்படத்தில் பழங்குடியினத் தலைவராகவும் நடிக்க இருக்கிறாராம் விஜய்சேதுபதி. இப்படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இது குறித்து கூறுகையில், ‘இந்தப்படத்தின் கதை விஜய் சேதுபதியை மையப்படுத்தியே நகரும். இதில் அவர் நகரத்தில் வாழும் பழங்குடியினத் தலைவராகவும் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் பகுதியில் காட்டிற்குள் வசிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் பழங்குடியின கெட்-அப் உள்ளிட்ட 8 கெட்-அப்களில் நடிக்கிறார். அதற்காக ஹேர்ஸ்டைல், புருவம் உள்ளிட்டவற்றை ஸ்டைலாக மாற்ற இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply