
சென்ற வாரம் வெளியான படம் ஆண்டவன்கட்டளை இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்சேதுபதிக்கு பெயர் சம்பாதித்து கொடுத்த படம் என்றால் அது மிகையாகது இது வரை விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெற்றி படங்கள் தான் ஒரு சிர்ச்ந்த நடிகர் என்று நிரூபித்தவர் ஆனால் அதையும் மீறி ரசிகர்களிடம் மிக பெரிய பெயரும் வசூலையும் சம்பாதித்த படம் என்றால் அது ஆண்டவன் கட்டளை
தியேட்டரை விட்டு வெளியே வரும் அத்தனை பேரும், ஆஹா… சூப்பர்… என்றபடியே வருகிறார்கள். ‘ஆண்டவன் கட்டளை’, மணிகண்டனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் பம்பர் லாட்டரி. இதற்கப்புறம் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை ஏற்றவும், இதைவிட பெரிய ஹீரோக்களை அப்ரோச் பண்ண அன்புச்செழியனுக்கு தைரியம் தரவும் பாலமாக அமைந்த படமல்லவா?
நேற்று ‘ஆண்டவன் கட்டளை’ பட இயக்குனர் மணிகண்டனுக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியனிடமிருந்து அழைப்பு. (படம் வெளிவருவதற்கு முன்பு வரை, ஆண்டவன் கட்டளை பாடல் விஷயத்தில் இவருக்கும் அவருக்கும் ஒரு நூலிழை அளவுக்கு விரிசல் இருந்தது நினைவிருக்கலாம்) என்னவா இருக்கும்…? என்று டவுட்டுடன் போன மணிகண்டனை, “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க” என்றாராம் அன்புச்செழியன். வெயிட் பண்ணிக் கொண்டிருந்த போதே வந்து சேர்ந்தார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.
இருவருக்கும் தட்டு நிறைய பழங்களை வைத்து பாராட்டு தெரிவித்த அன்புச்செழியன், தலா பத்து சவரன் தங்க சங்கிலியை அவரவர் கழுத்தில் அணிவிக்க, அந்த இடமே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் குடோன் ஆனது! காற்றிலேயே இனிப்பு வீசியது!
உழைப்புக்கு தருகிற ஒவ்வொரு சொட்டு பாராட்டும், பொங்கி வழியும் மேட்டூர் அணைக்கு நிகரான உற்சாகத்தை வழங்குமல்லவா? அதனால்தான்!
ஐயா அன்புச்செழியன் அவர்களே… பாராட்டும் தங்க சங்கிலியும் இருவருக்கு மட்டும்தானா? இவ்வளவு அற்புதமான கதையை எழுதிய டி.அருள்செழியனுக்கு இல்லையா? அடுத்த செய்திக்காக வெயிட் பண்றோம் சார்…!