Friday, June 2
Shadow

என்னை விட விஜய்சேதுபதி பெரிய நடிகர் இல்லைபிரபல நடிகர்

யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான்!

விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும் ஒரு முக்கியமான ரோல் இருந்தது. அதற்கப்புறம்தான் அவரை பற்றி உலகமும் அறிந்தது. ‘பையன் நல்லா நடிக்கிறாப்ல… நல்லா வருவாப்ல…’ என்றெல்லாம் மஹா ஜனங்கள் சொன்னதில் பாதிதான் உண்மையாச்சு. மீதி பொய்யாய் போனதற்கு பாபிசிம்ஹாவின் படப்பிடிப்பு சேட்டைகளே காரணம். ஷுட்டிங்குக்கு வருகிற விஷயத்தில் இவர் இன்னொரு சிம்பு என்று கோடம்பாக்கமே துண்டை வாயில் பொத்திக் கொண்டு பொங்கி வருவது தனிக்கதை!

இருந்தாலும் இவருக்கும் காத்திக் சுப்புராஜூக்கும் மட்டும் என்னவோ உறவு, பாசம், இத்யாதி இத்யாதி. அவருடைய படங்களில் மட்டும் இவர் சேட்டை செய்வதில்லை. அவரும் இவரை தூக்கிப்பிடிக்கிற மாதிரியே கேரக்டர்களை தருவார். ஜிகிர்தண்டா படத்திற்காக தேசிய விருதே வாங்கிவிட்டார் பாபிசிம்ஹா. பெரும்பாலும் தேசிய விருதுகளால் பெரும் வரவுகள் இல்லை என்றாலும் பொல்லாத பெருமை உண்டல்லவா? அதை வைத்துதான் விஜய் சேதுபதியை இடறியிருக்கிறார் பாபி.

பிரபல தொலை தொடர்பு நிறுவனம் ஒன்று தமிழில் தனது தொழிலை விரிவு படுத்த ஒரு விளம்பரப்படம் எடுக்க முன் வந்தது. மும்பைக்காரர்களாகிய அவர்களுக்கு தமிழில் யார் டாப் என்பதே புரியாத நிலை. இருந்தாலும் இங்குள்ள நிறுவனம் ஒன்றின் உதவியோடு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களின் லிஸ்ட்டை போட்டு, அலசி ஆராய்ந்து விஜய் சேதுபதியை டிக் அடித்ததாம். கொடுமை என்னவென்றால் அந்த லிஸ்ட்டில், ஒரு ஓரத்தில் பாபி சிம்ஹாவின் பெயரும் இருந்ததுதான்.

வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு போகிறது என்பதை அறிந்த பாபி சிம்ஹா, நேரடியாக அந்த நிறுவனத்திற்கு ஒரு மெயில் அனுப்பினாராம். “நான் தேசிய விருது பெற்ற நடிகன். எனக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ஃபேன் பாலோயர்ஸ் இருக்கிறார்கள். என்னை விட விஜய் சேதுபதி பெரிய நடிகர் அல்ல” என்பதுதான் அந்த மெயிலின் சாரம்சம். அப்புறமென்ன? தமிழ்சினிமா நிலவரத்தை அரைகுறையாக கூட தெரிந்திராத அப்ரசண்டுகள் ஒரு கோடி சம்பளத்தில் பாபி சிம்ஹாவையே பிக்ஸ் பண்ணிவிட்டார்கள்.

ஒரு கோடி போச்சே என்று அழுகிற நிலையிலா இருக்கிறார் விஜய் சேதுபதி? அடப் போங்கப்பா…

Leave a Reply