Monday, January 17
Shadow

கோலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி வாரிசு சஞ்சய்


மதுரை தளபதி விஜயின் ரசிகர் மன்றத் தலைவரான மகேஷ் வீட்டிற்கு விஜய் அப்பா SA சந்திரசேகர் & அம்மா ஷோபா சந்திரசேகர் சென்று அங்கு ரொம்ப நேரம் செலவழிச்சாங்களாம். அப்போ அவர்களோடு எடுத்துக்கொண்டப் புகைப்படம் தற்போது வைரலாகப் பரவி வருது.

அந்த சந்திப்பிற்குப்பின் தன்னிடம் மைக்குகளை நீட்டிய ஊடகவாசிகளிடம் மகேஷ், “ ஒரு விஷயம் தெர்யுமா..?நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தளபதி விஜயோட மகர் (மகன் என்பதைதான் மரியாதையாக சொன்னாராம்) சஞ்சய் நடிப்பிலும் திறனிலும் வளர்த்துக்கொண்டு வருகிறார்.

அவருடைய அப்பாவைவிட ஐந்து மடங்கு திறமைகளைக் கொண்டவர் சஞ்சய். எப்படியும் அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துவிடுவா -ன்னு ஷோபாம்மா சொன்னய்ங்க.” அப்படீன்னு சொன்னதா ஒரு தகவல் வேகமா பரவுது!

CLOSE
CLOSE