Saturday, October 12
Shadow

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில்

ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.

இப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.

மேலும் சிறந்த எடிட்டிங்கான விருதை இப்படம் வென்றது.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த படத்தை தானே தயாரித்து இயக்க தயாராகிவிட்டாராம்.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, பிரபல மலையாள நடிகரும் நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மோகன்ராஜா இயக்கும் சிவகார்த்திகேயனின் படத்தின் மூலம் பஹத்பாசில் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply