Wednesday, April 23
Shadow

அரங்கமே அதிருபோகும் ஆட்டம் ஆடும் விஜய் சேதுபதி – டி.ராஜேந்தர்

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு விஜய் சேதுபதியும், டி.ராஜேந்தரும் இணைந்து குத்தாட்டம் போடவிருக்கிறார்களாம். இரண்டு பேருமே குத்தாட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள்தான். இரண்டு பேர் கூட்டணியில் அமையும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிறுவனம் கடைசியாக தயாரித்த ‘தனிஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply