‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் எனவும் அவருக்கு இணையாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சமந்தா இத்தகவலைத் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.