
விக்ரம் நடிப்பில் இரு முகன் திரைப்படம் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதைதொடர்ந்து இவர் திருவின் கருடாவில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் கருடா படம் தள்ளிபோய் உள்ளது. இந்த இடைவெளியில் சாமி -2 நடிபதாக இருந்தது அதுவும் தள்ளிப்போனதால் இப்போது சசிகுமாரை வைத்து வைத்து பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்படுகிறது திரு பட வாய்ப்பு போனதால் விக்ரம் இயக்குனரிடம் சொல்லி இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்ததாக சொல்லபடுகிறது.