Tuesday, September 10
Shadow

இரு முகன் படக்கதை ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்து: துபாயில் விக்ரம் பேட்டி

இரு முகன் படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்று அந்த படத்தின் கதாநாயகன் விக்ரம் தெரிவித்தார். நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டுஇருக்கும் படம் இருமுகன் இந்த படம் ரசிகர்களிடம் மிகவும் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. என்று தான் சொல்லணும் இந்த படத்தை பற்றி நாயகன் விக்ரம் துபாயில் படத்தை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்தது பார்க்கலாம் .

துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இரு முகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது;

அறிவியல் தொழில்நுட்பம்

இரு முகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்கு தமிழில் 36ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கான கதை மற்றும் இயக்கத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும், பாடல் காட்சிகளும் சிறந்த முறையில் வந்துள்ளது. அனைத்து காட்சிகளும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட விருந்து

இந்த திரைப்படத்தில் நான் இரு வித்தியாசமான வேடங்களில் வருகிறேன். என்னுடன் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இதில் நடிகர் நாசர் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நகைச்சுவையும் இருக்கும். இதற்காக தம்பி ராமையா சிறப்பாக நகைச்சுவையுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரசிர்கர்களுடன் படம் பார்த்தார்

இரு முகன் திரைப்படத்தின் தொடக்க விழாவை துபாயில் 7 மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த திரைப்படத்தை துபாயில் உள்ள எப்.டி.பி நிறுவனம் வெளியிடுகிறது. நேற்று துபாயில் மாலை தேரா சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

அந்த திரையரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. திரைப்படத்தின் முதல்நாள் காட்சியில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார்.

Leave a Reply